புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ராகவா லாரன்சை பங்கமாக கலாய்த்த பிரபல இயக்குனர்.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு!

தமிழ் சினிமாவில் நடிகர், நடன இயக்குனர் என வலம் வந்த ராகவா லாரன்ஸ் திடீரென படங்களை இயக்கத் தொடங்கினார். அந்த வகையில் முனி, காஞ்சனா1, காஞ்சனா2, காஞ்சனா 3 என ரசிகர்கள் சலித்துப் போகும் அளவிற்கு தொடர்ந்து ஒரே பேயை வைத்து படங்களை இயக்கி தள்ளினார்.

இப்படம் தமிழில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றாலும், அடுத்தடுத்து ஒரே கதையை ரசிகர்கள் பார்க்க விரும்பவில்லை. எனவே காஞ்சனா படத்தை லட்சுமி என்ற பெயரில் ஹிந்தியில் ராகவா லாரன்ஸ் ரீமேக் செய்தார். அங்கு பாலிவுட் பிரபல நடிகரான அக்ஷய் குமார் இப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ள ராகவா லாரன்ஸ் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2  மற்றும் துர்கா, ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் துர்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது. முகத்தை மிக அருகில் வைத்து செல்பி எடுப்பதை போல அந்த புகைப்படம் இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் இப்படத்தின் போஸ்டரை பங்கமாக கலாய்த்துள்ளார். தமிழில் மேயாத மான், ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் ஏ.ரத்னகுமார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் ஸ்க்ரிப்ட் ரைட்டராகவும் பணிபுரிந்து வருகிறார்.

durga-raghava-lawrence-rathana-kumar
durga-raghava-lawrence-rathana-kumar

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் துர்கா படத்தின் பர்ஸ்ட் லுக்கை பகிர்ந்துள்ள ரத்தினகுமார் ஸ்னாப்ஷாட்டின் புதிய பில்டர் என கமெண்ட் அடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி பங்கமா கலாச்சிருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News