செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

தன் படத்தை மட்டும் விளம்பரப்படுத்தும் நயன்தாரா.. அதிருப்தியில் பெரிய முதலாளிகள்!

ரசிகர்களுக்கு திரையுலக பிரபலங்கள் என்றாலே தனி சந்தோஷம் தான். அவர்களை பார்ப்பதற்கு பலர் பல முயற்சிகளை மேற்கொள்வார்கள் எனினும் சிலருக்கு தான் சினிமா பிரபலங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

நேரில் பார்க்க முடியாதவர்கள் வெள்ளித்திரை அன்றி வேறு நிகழ்ச்சிகளில் அனைத்து பிரபலங்களையும் காண்பதே ஒரு வரமாக எண்ணுவார்கள். ஏதேனும் ஒரு படத்தினுடைய பிரமோஷன், இசை வெளியீட்டு விழா , விருது வழங்கும் விழா போன்ற தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்காக ரசிகர்கள் காத்திருப்பதும் உண்டு .

அதுபோன்ற நிகழ்ச்சிகளில் தாங்கள் எதிர்பார்க்கும் பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் அது ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்தி விடுகின்றன. பிரபல நடிகர்களைப் போலவே தற்போது நயன்தாரா அந்த பானிய கடைப்பிடித்து வருகிறார்.

nayanthara-cinemapettai
nayanthara-cinemapettai

படத்தில் நடிப்பதோடு சரி அதன்பிறகு அந்த திரைப்படத்தின் புரமோஷன் களில் பற்றி எல்லாம் கவலை இல்லையாம். முன்னணி நடிகர்கள் மட்டும் தான் சம்பளத்தை கறாராக பேச வேண்டுமா ?நடிகைகளும் பேசலாம் என்று பத்து கோடிக்கு மேல் சம்பளம் கேட்டிருக்கிறாராம் நயன்தாரா

நயன்தாரா திருமணம் எப்போது நடக்கும் என்று ரசிகர்களை போலவே அவருடைய காதல் இயக்குனரும் கொண்டுள்ள நிலையில் நயன்தாரா படங்களில் படு பிசியாக இருந்தார். ஆனால் தற்போது அவருடைய காதல் இயக்குனரின் திரைப்பட புரமோஷனுக்கு வந்திருந்ததை நெட்டிசன்கள் பயங்கரமாகக் கலாய்த்துள்ளனர். தனக்கு வந்தால் ரத்தம் மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னியா என்று பயங்கரமாக பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். என்ன இருந்தாலும் சொந்த படத்தை விட்டுவிட முடியுமா ?நயன்தாரா பல சைடு பிசினஸ் இருக்கிறதாம். சிலர் சினிமாவில் நடிப்பது அவருக்கு ஒரு சைடு பிசினஸ் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

Trending News