செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

25 வயது மகனுக்கு அடிபோட்ட டிவி நடிகை.. கடைசில அவருடைய 55 வயது அப்பாதான் கிடைத்தாராம்

தமிழ் சினிமாவில் ஒரே காலகட்டங்களில் அப்பா மற்றும் மகன் இருவரும் நடித்து வருவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அப்பா மகன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.

மகன் இளமையாக இருந்தாலும் இந்த வயதிலும் அவருடைய அப்பா பார்ப்பதற்கு மிகவும் இளமையாக இருக்கிறார். அவருடைய அப்பாவா அல்லது அண்ணனா என பார்ப்பவர்கள் குழப்பமடையும் அளவுக்கு இருவருமே துருதுருவென இருக்கின்றனர்.

தன்னுடைய மகனுக்கு நல்ல சினிமா எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் அந்த நடிகர் சமீபத்தில் ஒரு ரீமேக் படத்தில் தன்னுடைய மகனை அறிமுகப்படுத்தினார். ஆனால் அவருடைய நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு படத்திற்கு கிடைக்கவில்லை.

இதனால் மகனுடன் சேர்ந்து நடித்து அவருடைய மார்க்கெட்டை உயரத்தை விட வேண்டும் என ஆசை பட்ட அந்த நடிகர் கேங்ஸ்டர் படங்களை இயக்குவதில் கைதேர்ந்த பப்ளி இயக்குனர் ஒருவருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்த படத்தில் நாயகியாக அந்த இளம் நடிகரின் அப்பாவுக்கு அந்தக்கால ஜோடியாக நடித்த நடிகையும், சமீபத்தில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகையும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் இருந்து முதல் முதலில் அழைப்பு வந்தபோது அந்த டிவி நடிகை இளம் நடிகருக்குத்தான் ஜோடியாக அழைக்கிறார்கள் என ஆசை ஆசையாக வந்தாராம். ஆனால் வந்த பிறகுதான் தெரிந்ததாம் ஜோடி மகனுக்கு இல்லை அப்பாவுக்கு என்று. இருந்தாலும் அப்பா பெரிய நடிகர் தானே என புண்பட்ட மனதை மாற்றிக் கொண்டாராம்.

Trending News