வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

தனுஷ் மாதிரி தேசிய விருது வாங்கணும் என்ற ஆசையில் ஜிவி பிரகாஷ்.. பக்கா ப்ளானுடன் தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி

நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மைகொண்டவர் ஜி.வி. பிரகாஷ். இசையமைப்பில் ஒரு நிலையான இடத்தை பிடித்த இவரால், நடிப்பில் முத்திரை பதிக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் லட்சுமி நாராயணன் கூட, நிறைய திறமைகள் இருந்தும் தொடர்ந்து மொக்கை படமாக நடித்து வருகிறார், என கலாய்த்து இருந்தார்.

அந்த அளவிற்கு, இவர் நடித்த படங்களில் ஒன்று கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. “டார்லிங்”, “த்ரிஷா இல்லைனா நயன்தாரா” படத்தில் இளசுகளை தன்பக்கம் இழுத்தவர், அதன்பின் தொடர்ச்சியாக ஃபிளாப் படங்களாகவே கொடுத்து வருகிறார். நடிப்பில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என இவரும் தொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறார்.

தற்போது இவர் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிவரும் “இடிமுழக்கம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். முபாரக் இயக்கிவரும் இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்து வருகிறார். காயத்திரி இதில் நாயகியாக நடித்துவருகிறார். இரண்டு ஆண்டு இடைவேளைக்குப் பின் சீனுராமசாமி இப்படத்தை இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய படங்கள் தேசிய விருதைப்பெற்றதால் இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிரித்துள்ளது. இந்த படத்திற்கும் வைரமுத்து பாடல் எழுதுவது கூடுதல் தகவல்.

idi-mulakkam-1
idi-mulakkam-1

இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்களை கிடப்பில் போட்டுவிட்டு இடிமுழக்கம் படவேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் சீனுராமசாமி. இந்தப்படத்தில் எப்படியாவது தேசிய விருது வாங்கி நடிப்பில் முத்திரை பதித்துவிடலாம் என்ற அபார நம்பிக்கையோடு காத்திருக்கிறாராம் ஜி.வி.

- Advertisement -

Trending News