புதன்கிழமை, ஜனவரி 15, 2025

5 ஆண்டுக்குப் பின் வெளியாகும் அஜித் இயக்குனரின் புதியப்படம்.. OTT தளத்திற்கு படை எடுக்கும் ரசிகர்கள்

தல அஜித் எப்போதுமே தான் நடிக்கும் படங்களில் கடுமையாக உழைக்கும் உதவி இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார். அப்படித்தான் “ஆசை” படத்தில் உதவி இயக்குனராக இருந்த எஸ்.ஜே.சூர்யாவை வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தினார்.

அதேபோல அஜித் ஹிந்தியில் நடித்த “அசோகா” படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் விஷ்ணுவர்தன். இவருக்கு பில்லா படத்தில் இயக்குனராக வாய்ப்பு கொடுத்தார். அதற்கு முன்னதாக விஷ்ணுவர்தன் ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ படங்களை இயக்கியிருந்தாலும் “பில்லா” அவருக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இதையடுத்து ஆரம்பம் படத்தில் இருவரும் இணைந்து மீண்டும் பணியாற்றினார்கள். கடைசியாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான “யட்சன்” திரைப்படம் சரியாக ஓடவில்லை. இதையடுத்து அஜித்தை வைத்து ஒரு வரலாற்றுப்படம் இயக்குவதாக இருந்தவர், அதற்கு முன்னதாக ஹிந்தியில் ‘ஷெர்ஷா’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

sidharth
sidharth

சித்தார்த் மல்கோத்ரா, கியாரா அத்வானி நடித்துள்ள இந்தப்படம் இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பாகிஸ்தானுக்கு எந்திரான கார்கில் போரில் 24 வயதில் வீரமரணம் அடைந்த இந்திய கேப்டன் விக்ரம் பாத்ராவின் வாழ்க்கை வரலாறுதான் “ஷெர்ஷா” என்ற பெயரில் உருவாகியுள்ளது.

விக்ரம் பாத்ரா கதாப்பாத்திரத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்படம் இன்று வெளியாகியுள்ளது.

Trending News