இவ்வளவு நாட்களாக இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை ஒருவர் சமீபகாலமாக பெரிய அளவு வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சிப்பாதையை கையில் எடுத்துள்ளதாக கிசுகிசுக்கின்றனர்.
ஃபாரின் மாடலான அந்த நடிகை தமிழில் சில படங்களில் நடித்தார். பார்த்தவுடனே பத்திக்கும் தோற்றத்தில் இருந்தாலும் இரண்டாம் கட்ட நடிகர்கள் பட வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது. முன்னணி நடிகர்களின் வாய்ப்பு இல்லை.
இதனால் அக்கட தேசத்திற்குச் சென்றவருக்கு அங்கேயும் இரண்டாம் கட்ட நடிகைகள் வாய்ப்பு தான் கிடைக்கிறது. ஆனால் அங்கே அம்மணியின் கவர்ச்சி ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது. இதன் காரணமாகவே அவருக்கு இறுக்கமான உடைகளை போட்டு படங்களில் நடக்க விடுகின்றனர்.
அதே ரூட்டை தமிழிலும் எடுக்க முடிவு செய்துள்ளாராம் அந்த நடிகை. வயது இருபத்தி ஒன்பதாக இருந்தாலும் பார்ப்பதற்கு கொஞ்சம் ஆண்ட்டி லுக் தான். இருந்தாலும் ஜிம்முக்கு போய் உடம்பை தாறுமாறாக ஏற்றி வைத்துள்ளார்.
சமீபத்தில் அக்கட தேசத்தில் ஒரு படத்தில் அந்த நடிகையை நடித்திருந்த ட்ரெய்லர் வெளியானது. அதில் செம டைட்டான டி ஷர்ட் அணிந்து கொண்டு ஒரு காட்சியில் வந்து சென்றிருந்தார் அந்த நடிகை. அடுத்த நிமிடமே இது இணையத்தில் சமூக வைரல்.
அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் ஒரு பத்திரிக்கை பேட்டியில் ஓபன் ஆகவே தனக்கு கவர்ச்சி கதாபாத்திரங்கள் கிடைத்தால் மிரட்டி தள்ளி விடுவேன் எனக் கூறியிருந்தார். அதன் விளைவு தற்போது சின்ன சின்ன உடைகளுடன் ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் வீட்டில் வரிசை கட்டி நிற்கிறார்களாம்.