திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அபிஷேக் பச்சனுடன் கை கோர்க்கும் பார்த்திபன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

சமீபகாலமாக தமிழ் சினிமாவும் நல்ல தரமான படங்களை வழங்கி வருகிறது. வித்தியாசமான கதைக்களங்களில் திரில்லர் படங்களும் தமிழில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி தமிழ் படங்களுக்கு மற்ற மொழிகளில் நல்ல மார்க்கெட் நிலவி வருகிறது. குறிப்பாக ஹிந்தி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தமிழ் படங்களை ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் 20 படங்களுக்கு மேல் ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளன. அந்த வரிசையில் மிக முக்கியமான படமாக கருதப்படும் ஒத்த செருப்பு படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளது. இப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான ஒரு படமாகும்.

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் கடந்த 2019ஆம் ஆண்டு ஒத்தசெருப்பு என்ற படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் செய்தது. மேலும் தேசிய விருதையும் இப்படம் பெற்றது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் மாசிலாமணி என்ற ஒற்றை கதாபாத்திரம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. இப்படத்தில் நடித்ததற்காக சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பார்த்திபனை பாராட்டினார். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே நடிக்கும் படங்கள் தமிழ் சினிமாவில் மிக அரிதாக மட்டுமே வெளிவரும். அந்த வரிசையில் ஒத்த செருப்பு படம் சிறப்பான முறையில் எடுக்கப்பட்டு ரசிகர்களிடம் நல்ல பெயரை தட்டிச் சென்றது.

இந்நிலையில், ஒத்த செருப்பு படம் ஹிந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது. ஹிந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News