வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மீண்டும் தெலுங்கில் கால் பதிக்கும் அனிருத்.. பட்டையை கிளப்பும் கூட்டணி

தமிழில் ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். ரஜினியின் உறவினர், தனுஷ்தான் இவரை தூக்கிவிட்டார் என ஆரம்ப காலத்தில் இவர் மீது பல விமர்சனங்கள் இருந்தன. ஆனால், அதையெல்லாம் தாண்டி தனது தனித்துவமான இசையால் இன்று தனித்து பெரிய ஆளாக நிற்கிறார் அனிருத்.

அனிருத் என்றாலே இளமை துள்ளலான இசைதான். இவர் இசையமைக்கும் ஒவ்வொரு பாடல்களுக்குமே ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. எப்போதுமே ஏ.ஆர்.ரகுமானுக்கே முன்னுரிமை கொடுக்கும் ரஜினி தற்போது தொடர்ந்து அனிருத்துக்கே வாய்ப்பு கொடுக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

தமிழ் தவிர்த்து அனிருத் தெலுங்கில் ஏற்கனவே இசையில் தனது முத்திரையை பதித்துவிட்டார். நானியுடன் இவர் இணைந்த கேங் லீடர் படத்தின் அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப்படத்தில் இடம்பெற்ற பாடல்தான் தமிழில் தாராள பிரபு படத்தில் ரீமேக் செய்யப்பட்டது.

anirudh-JrNtr-cinemapettai
anirudh-JrNtr-cinemapettai

தற்போது அனிருத் மீண்டும் தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே இவர், ‘அஞ்ஞாதவாசி’, ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’ போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்தார். தற்போது தெலுங்கில் முதன்முறையாக ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல் வந்துள்ளது.

தெலுங்கில் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்துக்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை இப்போதே அக்கட தேசத்து இளசுகள் கொண்டாட தயாராகிவிட்டனர்.

Trending News