40 வயதைக் கடந்த நடிகை ஒருவர் இன்னமும் மாப்பிள்ளை கிடைக்காமல் மனவேதனையில் தன்னுடைய குடும்பத்தாரிடம் தயவு செய்து கல்யாணம் பண்ணி வைங்க என கதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர். இவருக்கு ரசிகர்கள் செல்லமாக அரேபிய குதிரை எனவும் பெயர் வைத்தனர். கவர்ச்சியிலும் குடும்ப கதாபாத்திரங்களிலும் ரசிகர்களை அல்லல்பட வைத்தவர்.
அப்படிப்பட்ட நடிகை சமீபகாலமாக உடல் எடை ஏறி பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி கொண்டிருக்கிறார். போதாக்குறைக்கு நடித்த படங்களும் பெரிதாக கைகொடுக்கவில்லை. சோலோ ஹீரோயின் படங்களுக்கு அடித்தளம் போட்டதே இவர்தான்.
உண்மையில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இவருக்கு தான் கொடுக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு படத்துக்காக ரிஸ்க் எடுத்து தற்போது மொத்த அழகையும் இழந்து பட வாய்ப்புகளும் இல்லாமல் மிகுந்த சோகத்தில் உள்ளார்.
சரி, சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என மாப்பிள்ளை பார்த்தாலும் ஜாதகத்தில் ஆயிரத்தெட்டு குளறுபடிகளாம். காதலித்து திருமணம் செய்யவும் வயதில்லை.
இதனால் எப்படியாவது தனக்கு ஒரு திருமணத்தை செய்து வைத்து விடுங்கள், அப்போதுதான் எனக்கு மன நிம்மதி கிடைக்கும் என தன்னுடைய குடும்பத்தினரிடம் கண்ணீர் வடிக்கிறாராம் அந்த நடிகை.