வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

20 வயதில் BMW கார் வாங்கி அசத்திய பிக் பாஸ் பிரபலம்.. கொண்டாடும் ஆர்மி, குவியும் பாராட்டுக்கள்!

சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன் பகல் நிலவு, இரட்டை ரோஜா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் சீரியலில் நடித்து பிரபலமானதைவிட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தான் அதிக அளவில் பிரபலமானார். தினமும் விதவிதமான வீடியோக்களை இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரை ஏராளமானோர் இன்ஸ்டாகிராமில் பின்பற்றி வருகிறார்கள். இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என ஷிவானி எதிர்பார்த்து வந்தார். ஆனால் அவருக்கு தற்போது வரை எந்தவித பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே தொடர்ந்து விடா முயற்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ஷிவானி தனது கலர் ஃபுல்லான படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் நண்பர்கள் மற்றும் தனது அம்மாவுடன் வெளியிடங்களுக்கு செல்லும் போது எடுக்கும் புகைப்படங்களையும் தவறாமல் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்.

shivani narayanan
shivani narayanan

இந்நிலையில் தான் புதிதாக பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கியிருப்பதாக, புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதற்கு ரம்யா பாண்டியன் தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். கூடவே ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை ஷிவானிக்கு தெரிவித்து வருகிறார்கள்.

Trending News