புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பட வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரையில் களமிறங்கும் நமிதா.. எந்த டிவி என்ன சீரியல் தெரியுமா.?

குஜராத்தின் சூரத்தில் பிறந்து 2004 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின்மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை நமீதா. பாண்டியராஜ், பிரபுதேவா, வடிவேலு ஆகியோர் நடித்திருந்த இந்தப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் நமீதா. முதல் படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் இழுத்து மூடி நடித்திருந்தார்.

அதையடுத்து ஒரு சில படங்களில் நடித்தவர் பின்னர் வாய்ப்புகள் குறையவே கவர்ச்சியில் களமிறங்கினார். அதிலும் குறிப்பாக தல, தளபதியுடன் இவர் நடித்த பில்லா, அழகிய தமிழ் மகன் படங்களில் இவரது கவர்ச்சி வேற லெவல். பில்லா படத்தில் பிகினியில் வந்து அசத்தியிருப்பார்.

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டு மீம் கிரீயேட்டர்களுக்கு நல்ல தீனி போட்டார். பின்னர் பட வாய்ப்புகள் முற்றிலும் குறையவே 2017 ஆம் ஆண்டு அவரது தோழரான வீரேந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இறங்கினர்.

namitha-stills
namitha-stills

முன்னதாக ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்ட அவர் கடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தற்போது அரசியலிலும் ஆக்டிவாக இல்லாமல் இருக்கும் நமீதா சின்னத்திரைக்கு வரவிருப்பதாக தகவல் வந்துள்ளது.

இதுவரை பல சினிமா பிரபலங்கள் சீரியலில் சின்ன சின்ன வேடத்தில் நடிக்க தொடங்கியுள்ள நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் புதுபுது அர்த்தங்கள் என்ற சீரியலில் நமீதா நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

Trending News