சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

விவேக்கின் கடைசி வீடியோ பார்த்த சூர்யா.. என்ன சொன்னாரு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் விவேக். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்கள் விவேக் வைத்து பல படங்களை இயக்கினர்.

தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்தார். நகைச்சுவை கூறுவது மட்டுமில்லாமல் அதில் சமூக கருத்துக்களையும் முன்வைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் பல லட்சத்திற்கு மேலான மரங்களை நற்று இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார்.

நகைச்சுவையின் மூலம் நீங்காத இடத்தைப் பிடித்திருந்த விவேக். அதன் பிறகு பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் பல வருடங்களுக்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இவரது நடிப்பில் வெளியான தோழா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

vivek
vivek

நடிகர் விவேக் சிறிது காலமாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இது திரைத்துறையில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் பலரும் விவேக்கின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

நடிகர் விவேக் கடைசியாக ஒரு காமெடி வெப் சீரிஸ் இத்தொடரில் கலந்துகொண்டுள்ளார். தற்போது இந்த வீடியோவை அமேசான் அவர்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சிங்கம் உட்பட பல படங்களில் இணைந்து பணியாற்றிய சூர்யா விவேக் நடிப்பில் கடைசியில் உருவான இந்த வெப்சீரிஸ் தொடரை பதிவிட்டு நம் மனதில் எப்போதும் விவேக் அவர்கள் வாழ்வார். விவேக் சாரின் இறுதி நடிப்பில் உருவான வீடியோவில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Trending News