சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சூப்பர் மாடல் மீரா மிதுன் கேரளாவில் கைது.. பரபரப்பான நிமிடங்கள்

பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்ட மீரா மிதுன் சமீபத்தில் ஒரு பட்டியல் இனத்தவரைப்பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். மீராமிதுனின் இந்த அடாவடி பேச்சு பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், மீராவோ, நாடே களோபரமாக உள்ளது, நான் ஒட்டுமொத்த பட்டியல் இனத்தவரைப்பற்றி பேசவில்லை. என்னை தொந்தரவு செய்தவர்களை பற்றி மட்டும்தான் பேசினேன். இதையும் மீறி இந்த சின்ன பிரச்சனைக்காக என்னை கைது செய்ய வேண்டுமென்றால் கைது செய்துகொள்ளுங்கள்.

காந்தி, நேரு போன்றவர்கள் எல்லாம் சிறைக்கு செல்லவில்லையா.. மேலும், என்னை கைது செய்வதெல்லாம் ஒருபோதும் நடக்காது. அது கனவில் தான் நடக்கும் என சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், மீரா மிதுனை கேரளாவில் இன்று சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை விரைவில் சென்னை கொண்டுவர உள்ளனர். கைது செய்யும்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,போலீசார் தன்மீது கை வைத்தால் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துவிடுவேன் என கூறியிருந்தார்.

meera-mithun
meera-mithun

ஏற்கனவே நடிகர் விஜய், சூர்யாவைப்பற்றி அவதூறாகப் பேசியது,கொலை மிரட்டல் விடுத்தது,பண மோசடியில் ஈடுபட்டது என பல வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News