புதன்கிழமை, ஜனவரி 1, 2025

இந்திய அளவிலான போட்டியில் பங்கேற்கும் அஜித்.. எப்போது தெரியுமா.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தற்போது தமிழ் சினிமா முழுவதும் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் படம் என்றால் அது அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படம் மட்டும் தான். இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ரஷ்யா செல்ல உள்ளனர். அத்துடன் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விடும். இப்படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அதுகுறித்த மற்றுமொரு சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித் நடிப்பை தவிர கார், பைக், ஏரோ மாடலிங் மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் அதிக விருப்பம் கொண்டவர். கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் கலந்து கொண்டார்.

சமீபகாலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வரும் அஜித், படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் சென்னை துப்பாக்கி சுடுதல் கிளப்புக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுமட்டுமின்றி சமீபத்தில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு 6 பதக்கங்களை வென்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதற்காக அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அஜித்தை பாராட்டினார்கள். இந்நிலையில் தற்போது மாநில அளவிலான வெற்றிக்குப் பிறகு தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் பங்கேற்கவுள்ளார். இப்போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

ajith-gun
ajith-gun

இதற்காக படப்பிடிப்பு இல்லாத சமயங்களில், தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நிச்சயம் பதக்கம் வெல்வார் என அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். ஒருவேளை அஜித் பதக்கம் வென்றால் தமிழ்நாட்டுக்கே பெரும் சேர்க்கும் விஷயமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News