புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கர்ப்பிணியாக கீர்த்தி பாண்டியன்.. தொப்புள் கொடியில் தீ., சர்ச்சையை கிளப்பிய கண்ணகி பட போஸ்டர்

தமிழ் சினிமாவில் தும்பா படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். அதன்பிறகு இவர் அன்பிற்கினியால் எனும் படத்தில் அப்பாவுடன் இணைந்து நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா மற்றும் ஜூங்கா போன்ற படங்களை இயக்கிய கோகுல் தான் அன்பிற்கினியால் படத்தையும் இயக்கினார். இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படத்திற்கு பிறகு அடுத்த படத்தின் தலைப்பு உடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு கண்ணகி என பெயர் வைத்துள்ளனர். கீர்த்தி பாண்டியனின் கண்ணகி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர்.

keerthi pandiyan
keerthi pandiyan

அதேபோல் சுதந்திர தினத்தன்று இயக்குனர் மோகன் ராஜா, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல பிரபலங்களும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி பாண்டியன் தொப்புள் கொடியில் இருந்து ஒரு கயிறு வருவது போலும் கயிற்றின் மறுமுனையில் ஒரு நபர் தீ வைப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஒருசில ரசிகர்களிடம் வரவேற்பும் மற்றொரு ஒரு சில ரசிகர்களிடம் வெறுப்பையும் பெற்று வருகிறது.

ஒருவேளை இப்படத்தில் கண்ணகியின் கதாபாத்திரத்தில் இழிவுபடுத்தும் வகையில் இருக்குமோ என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் இப்படத்தின் கதை அம்சத்தையும் என்ன கதாபாத்திரத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார் என்பது பற்றிய முழு விவரங்களும் வெளியிட வேண்டும் எனவும் பலரும் கூறி வருகின்றனர். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.

Trending News