செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரமணா கதையை ஆட்டையை போட்ட முருகதாஸ்.. அந்த இயக்குனருக்கு உதவி செய்த விஜயகாந்த்

புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் வந்து இருந்தாலும் இன்றைய தலைமுறையினரும் கொண்டாடும் படமாக இருப்பது ரமணா தான். தீனா என்ற வெற்றி படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸின் இரண்டாவது திரைப்படம் இது.

முருகதாஸ் படங்கள் எப்போதுமே சமூகக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கமர்ஷியல் படங்களாக இருக்கும். அந்த வகையில் ரமணா படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வசூல் மழை பொழிந்தது.

ஆரம்பத்திலிருந்தே முருகதாஸ் மீதுள்ள குற்றச்சாட்டு என்னவென்றால் தனக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கதையை ஆட்டையை போட்டு படம் எடுக்கிறார் என்பதுதான். ஏன் இது சர்கார், தர்பார் வரை தொடர்ந்தது.

ஆனால் முருகதாஸ் எப்போதுமே அதை ஒப்புக் கொண்டதே கிடையாது. விஜயகாந்த் நடிப்பில் உருவான ரமணா படத்தின் கதைகூட விஜயகாந்தின் தென்னவன் படத்தை இயக்கிய நந்தகுமார் என்பவருடையது தான்.

இதைக் கேள்விப்பட்ட விஜயகாந்த், உடனடியாக நந்தகுமாருக்கு தென்னவன் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். ஒருவருடைய உழைப்பைக் எடுக்கக்கூடாது என விஜயகாந்த் செய்த அந்த காரியம் இன்று வரை தனக்கு நெகிழ்ச்சியை தருவதாகவும் நந்தகுமார் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ரமணா படத்திற்கு பிறகு விஜயகாந்த் முருகதாஸுடன் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. ஒரு காலத்தில் தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வந்த ஏ ஆர் முருகதாஸ் தற்சமயம் பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

ramana-cinemapettai-01
ramana-cinemapettai-01

Trending News