மங்காத்தா ரேஞ்சுக்கு உருவாகும் வெங்கட் பிரபுவின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

வெங்கட் பிரபு மற்றும் சிம்பு கூட்டணியில் உருவான மாநாடு படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போது அதிகமாகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பெரிய முயற்சி எடுக்க உள்ளார்.

முதல் முறையாக வெங்கட் பிரபு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்துக்கான கதை விவாதம் தற்போது நடைபெற்று வருகிறதாம்.

மேலும் இந்த படத்தில் ஹீரோவாக தமிழ் நடிகர்களை தேர்வு செய்யாமல் கன்னட நடிகரான கிச்சா சுதீப் என்பவரை தேர்ந்தெடுத்துள்ளாராம் வெங்கட் பிரபு. கிச்சா சுதீப் இந்திய அளவில் ஃபேமஸான நடிகராக வலம் வருகிறார்.

இதுவரை ஹீரோவாக அவரது படங்கள் மற்ற மொழிகளில் வெற்றி பெறவில்லை என்றாலும் அவர் வில்லனாக நடித்த நான் ஈ போன்ற சில படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் அவரைக் கொண்டு சேர்த்தது என்பது மறுக்க முடியாத ஒன்று.

மேலும் வெங்கட்பிரபுவின் சினிமா கேரியரில் மங்காத்தா படத்திற்கு பிறகு மிகப் பெரிய வெற்றிப் படமாக இது அமையும் எனவும் இப்போதே கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. கடைசியாக வெங்கட்பிரபு இயக்கிய படங்கள் பெரிய அளவில் செல்லவில்லை என்பதும், அவரது இயக்கத்தில் உருவான பார்ட்டி படம் தற்போது வரை வெளியாக முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பதும் கூடுதல் தகவல்.

kichcha-sudeep-cinemapettai
kichcha-sudeep-cinemapettai