புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அடுத்த படத்திலும் சர்ச்சையை கிளப்பிய திரௌபதி இயக்குனர்.. பல இடங்களில் கத்தரி போட்ட சென்சார் போர்டு

வெறும் லட்சங்களில் தயாராகி 10 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த படம் என்றால் அது திரௌபதி படம் தான். அந்த படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்தே அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.

ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த படத்தை மோகன் ஜி என்பவர் இயக்கியிருந்தார். மேலும் அஜித்தின் மச்சான் ரிச்சட் என்பவர் ஹீரோவாக நடித்திருந்தார்.

அந்த படம் வெற்றி பெறவே திரும்பவும் அதே கூட்டணியில் ருத்ர தாண்டவம் என்ற படம் உருவாகி வந்தது. இந்த படத்தில் ரிச்சர்ட், குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா, ராதாரவி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மொத்த படப்பிடிப்பும் முடிந்து சமீபத்தில் இந்த படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்பியுள்ளனர். படம் முழுவதையும் பார்த்த சென்சார் அதிகாரிகள் பல இடங்களில் கத்தரி போட்டுள்ள செய்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக்கி உள்ளது.

ஏற்கனவே இதே போல் உருவான திரௌபதி படம் 16 வெட்டு வாங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த படத்தில் குறிப்பிட்ட தலைவரை நேரடியாக விமர்சித்ததை நீக்க சொல்லியும் சென்சார்போர்டு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்த படத்திலும் ஆரம்பத்திலேயே பல காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளதால் எந்த மாதிரி படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. மேலும் ருத்ர தாண்டவம் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளது எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

rudra-thandavam-cinemapettai
rudra-thandavam-cinemapettai

Trending News