செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

RRR படத்தில் நடந்த அதிரடி மாற்றம்.. அப்செட்டில் ரசிகர்கள்

இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்றான ராஜமவுலியின் RRR படத்தில் நடந்த மாற்றம் காரணமாக ரசிகர்கள் செம அப்செட்டில் இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளது.

இதுவரை தெலுங்கு சினிமாவில் தோல்வியே கொடுக்காத இயக்குனராக ராஜமௌலி வலம் வந்தாலும் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவராக மாறியது நான் ஈ படத்தில் தான்.

ராஜமௌலி என்ற ஒரு பெரிய இயக்குனர் இருக்கிறார் என்பதை மற்ற மொழி ரசிகர்களுக்கும் தெரிந்தது இந்த படத்தின் மூலம்தான். என்னதான் பாகுபலி பெரிய வெற்றியை பெற்றாலும் விதை போட்டது என்னமோ நான் ஈ படம் தான்.

அதனைத் தொடர்ந்து பாகுபலி படங்களின் வசூல் சாதனையை பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்திய சினிமாவில் 2000 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்து அனைவரையும் பிரமிக்க வைத்தது.

அதனை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடித்து வரும் RRR படம் உருவாகி வந்தது. இந்த படத்திற்கு தமிழில் ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயர் வைத்துள்ளனர்.

முன்னதாக அக்டோபர் 13-ம் தேதி 2011 ஆம் ஆண்டு RRR படம் மூலம் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது தங்களுடைய ரிலீஸ் தேதியை மாற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறது படக்குழு. இப்போதும் இந்தியாவில் பல இடங்களில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறுகின்றனர். அடுத்து எப்போ ரிலீஸ் என்ற செய்தி இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என தெரிகிறது.

RRR-ZEE5-cinemapettai
RRR-ZEE5-cinemapettai

Trending News