சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

விவேக்கால் அண்ணாச்சி படத்துக்கு வந்த சிக்கல்.. சோகத்தில் படக்குழு

ஜனங்களின் கலைஞன் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இறந்தது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் அதற்கு சில நாட்கள் முன்னர் தான் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

விவேக் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை தன்னுடைய காமெடி காட்சிகளில் பெரும்பாலும் சமூக கருத்துக்களை தெரிவித்து வந்ததால் அவருடைய காமெடி காட்சிகள் பெரும்பாலும் மற்றவற்றிலிருந்து தனித்தே இருக்கும். அதற்காக கமர்ஷியல் காமெடிகள் செய்யவில்லை என்று சொல்ல முடியாது.

இப்படி அனைத்திலும் சகலகலா வல்லவராக இருந்த விவேக் கடைசியாக அரண்மனை 3, அண்ணாச்சி படம் என பல படங்களில் நடித்து வந்தார். அதில் அரண்மனை 3 திரைப்படத்தில் விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகள் முன்னரே எடுக்கப்பட்டதால் தற்போது பிரச்சனை இல்லாமல் போய்விட்டது.

ஆனால் அண்ணாச்சி சரவணன் அருள் படத்தில் கிட்டத்தட்ட அவருடன் படம் முழுக்க வருகிற கேரக்டராம். பாதிப்படம் உருவாகியிருந்த நிலையில் விவேக் இறந்து விட்டதால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவரை போலவே கோவில் விழாக்களில் வேஷம் போடுபவர்களை தேடிப்பிடித்துக் டெஸ்ட் சூட் நடத்திக் கொண்டிருக்கிறார்களாம் படக்குழுவினர்.

விவேக் இந்தியன் 2 படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதுமட்டுமில்லாமல் அமேசான் தளத்தில் ஒரு காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி உள்ளார். அது விரைவில் வெளியாக உள்ளது.

தற்காலிகமாக அண்ணாச்சி படத்திற்கு முதலில் த லெஜென்ட் என பெயர் வைத்துள்ளார்களாம். மேலும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுடலா என்பவர் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

the-legend-cinemapettai
the-legend-cinemapettai

Trending News