தமிழ் சினிமாவில் தற்போது வரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத நடிகர் என்றால் அது நடிகர் அஜித் மட்டுமே. இவரை ரசிகர்கள் செல்லமாக தல என்று தான் அழைத்து வருவார்கள். இவரது எளிமையான தோற்றமும், ரசிகர்களிடம் பொறுமையாக பேசும் விதமும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்க காரணமாகும். தமிழில் மட்டுமல்லாமல் இதர மொழிகளிலும் அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது அஜித் போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் “வலிமை” படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாங்க வேற மாதிரி’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்நிலையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலியின் மகன் திருமணம் நடைபெற்றது. இதில் தெலுங்கு சினிமா உலகின் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பாகுபலி நடிகர் பிரபாஸ், தல அஜித் நடிப்பில் கடந்த ‘வேதாளம்’ படத்தின் ஹிட் பாடலான, ஆளுமா டோலுமா பாடலை போடுமாறு கேட்டுக்கொண்டார். இந்தப்பாடலுக்கு மேடையில் ராஜமவுலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ் உட்பட பல பிரபலங்கள் நடனமாடினார்.

தமிழ் நடிகர் அஜித்திற்கு தமிழ் மட்டுமல்லாமல் இதர மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த வீடியோவையும் இணையத்தில் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.