வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தில் இத்தனை நடிகைகளா?.. ஒரே அஜால்.. குஜால்தான் போல

தெலுங்கில் வெளியாகும் படங்களில் இரண்டு நாயகிகள் இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு தேவையே இல்லை என்றாலும் கூட இரண்டாவது நாயகிக்கான ஒரு தேவையை உருவாக்கி, அதனை வலிய கொண்டு வந்திருப்பார்கள் என்று திரை விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில், தற்போது இயக்குநர் ஷங்கர், தெலுங்கில் ராம்சரணை வைத்து இயக்கும் படத்திலும் இரண்டு நாயகிகள் உள்ளனர். இப்படத்தில் ராம்சரனுக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். இது இவருக்கு மூன்றாவது தெலுங்குப்படமாகும்.

முன்னதாக,ராம்சரணுடன் இணைந்து விநாய வித்ய ராமா என்ற படத்தில் நடித்திருந்தார். ஷங்கர் இயக்கும் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக அஞ்சலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது மூன்றாவது நாயகியாக தமன்னா நடிக்கவுள்ளாராம். ஒரு முக்கியமான ரோலில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சிறிய ரோலாக இருந்தாலும் கண்டிப்பாக பேசப்படும் என்கிறார்கள். இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தமன்னா – ராம்சரண் ஜோடி ரச்சா என்ற படத்தில் நடித்திருந்தார்கள்.

tamannah-cinemapettai
tamannah-cinemapettai

ராம்சரண், ஷங்கர் இணையும் இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக்க உள்ளது. தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.

அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்த முயற்சி, தாமதமானதால் தெலுங்கு படம் பக்கம் தனது செலுத்தி உள்ளார், காஸ்ட்லி இயக்குநர் ஷங்கர். அதே சமயம், தமிழில் கமல்ஹாசனை வைத்து இயக்கி வந்த இந்தியன் 2 திரைப்படம் பாதியில் நிற்கிறது. தயாரிப்பாளர் உடன் ஏற்பட்ட லடாய் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், அந்த படமும் அந்தரத்தில் தொங்கி கொண்டு உள்ளது.

தற்போது, எடுக்கும் படமாவது இழுப்பறி ஆகாமல் சுபமாக ரிலீஸ் ஆகட்டும் என எண்ணிக் கொண்டுள்ளனர், சினிமா ரசிகர்கள்…

Trending News