வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஸ்வரூபம் எடுக்கும் விவாகரத்து.. பிரபல நடிகையால் வாரிசு நடிகருக்கு வந்த சோதனை

பிரபலம் என்றாலே, பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் என்பார்களே, அந்தவகையில் தான், விவாகரத்து விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, கூலாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சமத்து நடிகை சமந்தா.

சென்னை பல்லாவரத்தில் பிறந்து தமிழ், தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின் நாக சைதன்யாவின் குடும்பப்பெயரான அக்கினேனி என்பதை தனது பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொண்டார் சமந்தா. ஆனால், சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் இருந்து தன் பெயருக்குப் பின்னால் இருந்த அக்கினேனி என்ற பெயரை நீக்கினார். இதனால் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக செய்தி பரவியது.

கோவா தனக்கு மிகவும் பிடித்த இடம் என்றும், அங்கு வசிக்க ஆசையாக இருப்பதாகவும் திருமணத்திற்குப் பின் தெரிவித்திருந்தார் சமந்தா. இந்நிலையில் தன் கணவருடன் சேர்ந்து கோவாவில் நிலம் வாங்கியிருக்கிறாராம்.

இதன்மூலம் நாங்கள் இருவரும் சேர்ந்துதான் இருக்கிறோம், தங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி விவாகரத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். புதிதாக வாங்கிய அந்த இடத்தில் பிரமாண்டமான பண்ணை வீட்டை கட்ட அவர்கள் முடிவு செய்திருக்கிறார்களாம்.

ஆனால், இதுவரை அக்கினேனி பெயரை நீக்கியதற்கு அவர் காரணம் தெரிவிக்கவில்லை. தற்போது சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இறுதி கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

samantha-naga-chaithanya-couple
samantha-naga-chaithanya-couple

இதற்கிடையில், ஆன்லைன் மூலம் பிரத்யேக ஆடைகளை விற்பனை செய்து, அதிலும் பெரும் லாபம் ஈட்டி வருகிறார் சமந்தா. சொல்பவர்கள் ஆயிரம் சொன்னாலும், காது கொடுத்து கேட்க கூட நேரமில்லாமல் அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வருகிறார் சமத்து நடிகை சமந்தா என்கின்றனர் பெண் ரசிகைகள்.

Trending News