செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சோத்துக்கே சிங்கி அடிக்கிறாரா அஜித், விஜய் பட வில்லன்? வைரலாகும் புகைப்படம்

சினிமாவைப் பொருத்தவரை ஒரு ஹீரோ எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளாரோ அதே அளவிற்கு வில்லனும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவது உண்டு. அந்த வகையில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் பிரகாஷ்ராஜ். விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இக்கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

தற்போது பிரகாஷ்ராஜுக்கு அடுத்தபடியாக மோஸ்ட் வான்டட் வில்லன் என்றால் அது நடிகர் ஜெகபதிபாபு தான். ஆனால் தமிழில் அல்ல தெலுங்கு சினிமாவில். இருப்பினும் இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார். குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான பைரவா மற்றும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

முன்னணி நடிகராக உள்ள ஜெகபதிபாபு தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தில் வில்லனாக ஜெகபதி பாபு நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெகபதி பாபு சாலையோர கடை ஒன்றில் அழுக்கு உடையணிந்து சாப்பிடுவது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒருபுறம் கூறி வருகிறார்கள்.

jagapathi babu
jagapathi babu

மற்றொரு புறம் அது அண்ணாத்த படப்பிடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல. தற்போது அவர் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெலுங்கு ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதில் எது உண்மை என தெரியவில்லை.

Trending News