அஜித் படம் வேண்டாம் என ஒதுங்கி இருக்கும் 4 இளம் நடிகைகள்.. இனி நீங்களே கேட்டாலும் கிடைக்காது

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் தல அஜித். படத்துக்கு போட்ட மொத்த பட்ஜெட்டையும் வெறும் ஒரே வாரத்தில் எடுக்கும் வல்லமை கொண்ட நடிகர்களில் மிக மிக முக்கியமானவர். ஆனாலும் கடந்த இரண்டு வருடமாக அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

கடைசியாக 2019ஆம் ஆண்டு விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் அஜித் நடிப்பில் வெளியானது. அதன்பிறகு தொடங்கிய வலிமை திரைப்படம் தற்போது வரை மொத்தமும் முடிக்க முடியாமல் தடுமாறி வருகிறது.

இந்நிலையில் இன்று தல அஜித் ரஷ்யாவில் நடக்கும் வலிமை படத்தின் ஒரு வார படப்பிடிப்புக்காக கிளம்பி விட்டாராம். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார். வினோத் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழில் முன்னணி நடிகராக வரும் தல அஜித்துடன் நடிக்க பல நடிகர் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் குறிப்பிட்ட நான்கு இளம் நடிகைகள் மட்டும் தல அஜித் பட வாய்ப்பு வந்தால் பெரிய அளவு ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்களாம்.

அதில் ஒருவர் தான் சமந்தா. விஜய்யுடன் மூன்று படங்களில் நடித்தபோதும் அஜித்துடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. அவரைப் போல் தான் கீர்த்தி சுரேஷ். இவரும் விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய்யுடன் இன்னமும் 10 படம் நடிக்க சொன்னாலும் நடிப்பேன் என்கிறார்.

amalapaul-samantha-cinemapettai
amalapaul-samantha-cinemapettai

அதேப்போல் அமலாபால், ஹன்சிகா மோத்வானி போன்றோரும் விஜய் படத்திற்கு கொடுக்கும் முன்னுரிமையை அஜித் படத்திற்கு கொடுப்பதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு கோலிவுட் வட்டாரங்களில் இருக்கிறது. இதனாலேயே அஜித் பாலிவுட் பக்கம் சென்று விடுகிறார் என்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமே தற்போது தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி இவர்களே வந்து அஜித் படத்தில் வாய்ப்பு கேட்டாலும் கிடைக்காதாம்.

keerthi-suresh-hansika-cinemapettai
keerthi-suresh-hansika-cinemapettai