டிக் டாக் செயலி மூலம் தனக்கென ரசிகர்களை உருவாக்கியவர் தான் சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா. தற்போது இந்தியாவில் டிக் டாக் செயலியை தடை செய்துள்ளனர். ஆனால் இச்செயலி உபயோகத்தில் இருந்த போது விதவிதமான வீடியோக்களை பதிவிட்டு தனக்கென ஏராளமான ரசிகர்களை வைத்திருந்தார் தர்ஷா குப்தா.
இதன் மூலம் கிடைத்த புகழ் காரணமாக இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் நடித்து வந்தார். இந்நிலையில்தான் தர்ஷாவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிகழ்ச்சியில் புகழுடன் இணைந்து இவர் செய்யும் குறும்புகளுக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். இதன் மூலம் மேலும் பிரபலமான தர்ஷாவிற்கு தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ப்ரொமோஷன் கிடைத்து உள்ளது. அதாவது தர்ஷா தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
அந்த வகையில் திரெளபதி படம் மூலம் பிரபலமான இயக்குனர் மோகன் ஜி இயக்கும் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து காமெடி நடிகர் சதிஷ்க்கு ஜோடியாக ஒரு திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கையில் விளக்குடன் புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள தர்ஷா, “ஓணத்தின் நிறம் மற்றும் விளக்குகள் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியை நிரப்பட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.