வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

நஸ்ரியாவை உப்பு மூட்டை தூக்கிய கணவரின் வீடியோ.. 7வது வருட திருமண நாளுக்கு குவியும் பாராட்டு.!

மலையாள திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. பின்னர் 2013ல் ‘நேரம்’ படம் மூலம் தமிழ், மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் என சில படங்களிலே நடித்தார்.

பின்னர் 2014 ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஃபகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் ஃபகத் பாசிலுடன் டிரான்ஸ், பிரித்வி ராஜுடன் கூடே என மொத்தம் மூன்று படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது 7வது திருமண நாளை கொண்டாடிய அவர், கணவர் தன்னை முதுகில் சுமந்து செல்லும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, திருமணநாள் வாழ்த்துக்கள், நீ அதிர்ஷ்டசாலி. பயணங்களின் போது நான் நடக்க மறுத்தால் நீ என்னை சுமந்து செல்கிறாய் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், எனது அனைத்து சாகச பயணங்களும் உன்னுடன் தான் நிகழ்ந்திருக்கிறது. அதனால் நீ என்னிடமிருந்து தப்பிக்க முடியாது. 7வது திருமணநாள் வாழ்த்துக்கள், என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து திரையுலகைச்சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மிக குறைந்த அளவிலே தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், தனது குழந்தைத்தனமான நடிப்பால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திருந்தார். தமிழில் இவருக்கென தனியாக ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

nazriya-fahadh
nazriya-fahadh

சமீபகாலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்துவந்த அவர் தற்போது தெலுங்கில் நானியுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார். அண்டே சுந்தரனிக்கி என்னும் இப்படத்தை விவேக் ஆத்ரேயா என்பவர் இயக்கி வருகிறார். இவர் தமிழுக்கு எப்போது வருவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

Trending News