வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அந்த விஷயத்தில் ரஜினி கொஞ்சம் கூட மாறவில்லை.. சீக்ரெட்டை உடைத்த குஷ்பு.!

சென்டிமெண்டாக குடும்பக்கதையை படமாக்குவதில் வல்லவரான இயக்குனர் சிவா, விஸ்வாசம் படத்தையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியைவைத்து ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின்மூலம் முதன்முறையாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இமான்.

இப்படத்தில் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் என ஒரு பெரிய பட்டாளமே இணைந்துள்ளது. இதில் நயன்தாரா, குஷ்பூ, மீனா மூவரும் கடைசியாக ரஜினியுடன் இணைந்து ‘குசேலன்’ படத்தில் நடித்திருந்தனர். 13 ஆண்டுகளுக்குப்பின் இவர்கள் ரஜினியுடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் இப்படத்தின்மூலம் ரஜினியுடன் முதன்முறையாக இணைந்துள்ளார். கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா 1981 ஆம் ஆண்டு வெளியான நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ அண்ணாத்த ஷூட்டிங்கில் நடந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது ‘இத்தனை வருடங்களில் அவர் மாறி இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் அப்படியே இருக்கிறார். ஷாட் இடைவேளையின் போது, ​​மீனாவும் நானும் எப்போதும் பேசிக்கொண்டிருப்போம்.

ரஜினி சார் அவரின் படப்பிடிப்பு முடிந்ததும் தனது கேரவனுக்குச் செல்லாமல், நேராக வந்து எங்களுடன் அரட்டையில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார்’ என தெரிவித்தார். மீனாவும், குஷ்பூவும் இதுவரை 7 படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

annaththe-cinemapettai
annaththe-cinemapettai

இப்படத்தின்மூலம் ரஜினி, நீங்க இடைவேளைக்குப்பின் குடும்பப்பாங்கான வேடத்தில் நடிக்க உள்ளார். இதில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News