சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஆனந்தராஜ்க்கு ஏற்பட்ட பெரிய ஏமாற்றம்.. 6 வருடம் கழித்து கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த ரஜினி

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் ஆனந்தராஜ். அப்போதெல்லாம் வில்லன் கதாபாத்திரம் என்றால் ஆனந்தராஜ் தான் பல இயக்குனர்களும் விடுவார்கள். அந்த அளவிற்கு தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார்.

ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான படம் ராஜாதி ராஜா படத்தில் ஆனந்தராஜ் வில்லனாக நடித்து இருப்பார். ரஜினிக்கும் ஆனந்தராஜ் இருக்கும் முறைப்பெண்ணாக நதியா நடித்திருப்பார். இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஜினிகாந்தின் ஒரு கதாபாத்திரம் கோழையாக காட்டப்பட்டிருக்கும். அந்த ரஜினிகாந்தை ஆனந்தராஜ் மிரட்டி வைத்திருப்பார்.

இப்படத்தின் ஆனந்தராஜ் முதல் வசனமே டேய் சின்ராசு எனக் கூறுவது தான். இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. முதலில் ஆனந்தராஜ் படத்தின் கடைசி வரை வருவார் எனக் கூறியுள்ளனர். ஆனால் படம் வெளியான பிறகுதான் தெரிந்தது ஆனந்தராஜ் ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்துள்ளார்.

ஆனந்தராஜ் இயக்குனர் சுந்தரராஜன் இடம் இதை பற்றி கேட்டு உள்ளார். ஆனால் இதைப் பற்றி எதுவும் கூறவில்லை. அதன் பிறகு ஆனந்தராஜ் வில்லனாக பல படங்களில் நடித்து வந்தார். அதனால் பெரிதாக மற்ற நடிகர்களை பற்றி எல்லாம் கண்டு கொள்ளவில்லை.

ஆனந்தராஜ் 6 வருடத்திற்குப் பிறகு ரஜினியிடம் இருந்து போன் கால் வந்துள்ளது. அப்போது பாட்ஷா படத்தில் தன்னை அடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். ரஜினி தன்னை அழைத்து நீங்கள் மட்டும்தான் இந்த கதாபாத்திரம் நடிக்க முடியும் என்றும் ரசிகர்கள் என்னை அடிக்கும் போது ஏற்றுக்கொள்ள வேண்டும்.

rajinikanth anandraj
rajinikanth anandraj

அதற்கு தகுந்த கதாபாத்திரம் நீங்க தான் என்று கட்டாயப்படுத்தி  அழைத்துள்ளார். அதற்குப் பின்னர் மிக முக்கியமான கதாபாத்திரம் என்பதால் மறுக்க முடியாமல் ஆனந்தராஜ் பாட்ஷா படத்தில் இந்திரன் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending News