புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நயன்தாரா சமந்தாவுடன் புட்போர்டு அடிக்கும் விஜய் சேதுபதி.. வைரலாகும் சூட்டிங்க் ஸ்பார்ட் புகைப்படம்

விஜய் சேதுபதி கைவசம் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழ் படங்களுக்கும் சரியான நேரத்தில் தேதி ஒதுக்கி பரபரப்பான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இடையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக வேலை செய்கிறார்.

தற்போது விஜய் சேதுபதி பாண்டிச்சேரியில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு சமந்தா மற்றும் நயன்தாரா என்ற இரண்டு ஜோடிகள்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித்குமார் தயாரித்து வருகிறார். இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிவடையவுள்ளது.

தற்போது பாண்டிச்சேரியில் பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியாக்கியுள்ளது. அதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரும் பேருந்து படியில் நின்று கொண்டு செல்வது போன்ற காட்சி எடுக்கப்பட்டு வருகிறது போல.

அப்படியே கொஞ்சம் பின்னாடி போனால் சத்யா படத்தில் கமல் மற்றும் அமலா இருவரும் வளையோசை கலகலவென என்ற பாடலில் பேருந்தில் புட்போர்டு அடிக்கும் காட்சி நினைவுக்கு வரும். ஒரு வேலை அந்த பாடலைத்தான் ரீமேக் செய்து எடுத்து வருகிறார்களா என்பதும் தெரியவில்லை.

kaathuvakkula-rendu-kaadhal-cinemapettai
kaathuvakkula-rendu-kaadhal-cinemapettai

நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாரா, விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி கூட்டணி இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. மேலும் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகலாம் எனவும் தெரிகிறது.

Trending News