தமிழில் சென்னை 28 படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இசையமைப்பாளர் இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட கங்கை அமரனின் மகனும் நடிகர் பிரேம்ஜியின் சகோதரருமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு துவக்கத்திலேயே நல்ல திரை பின்புலத்தோடு வந்தவருக்கு நடித்த படங்கள் பெருமளவில் வரவேற்பை பெறவில்லை.
இயக்கத்தில் குதித்த வெங்கட் பிரபுவுக்கு சென்னை 28 நல்ல பிரபலம் தந்தது. தொடர்நது வந்த கோவா இன்னும் ஒரு உயரத்திற்கு எடுத்துச்சென்றது. தல அஜித்குமாரின் ஐம்பதாவது படமான மங்காத்தா வெங்கட்பிரபுவை உச்சத்திற்கே கொண்டு சென்றது.
சூர்யா நடிப்பில் வெளிவந்த மாசு ஓரளவு கலெக்சனோடு ஓடி முடிந்தது கார்த்தி நடிப்பில் வந்த பிரியாணிக்குமான நிலை அப்படியே. இப்போது நடிகர் சிலம்பரசனை வைத்து மாநாடு படம் முடிவடையும் தருணத்தில் உள்ளது.
அடுத்தடுத்த அப்டேட்டிற்காக காத்திருந்த வெங்கட் பிரபு ரசிகர்களுக்காக ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளது வெங்கட் பிரபுவின் வட்டாரம்.

அடு்த்த படத்தில் கிச்சா சுதீப் நாயகனாக நடிக்க உள்ளார் என்றும் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னக மொழிகளில் இப்படம் வெளியாகும் என்னும் யுவன் அல்லது தமன் இசையமைப்பர் என்றும் கூறப்படுகிறது.