திருமணமானாலும் எல்லோருக்கும் பிடிக்கும் நடிகராக வலம் வருகிறார் அவர். சரியான பொழுதுபோக்கு பேர்வழி. அதேபோல் எல்லோரிடமும் ஜாலியாக பழகக்கூடியவர்.
அதுவும் ஒருமுறை இவருடன் நடித்து விட்டால் அந்த படத்தில் நடிக்கும் நடிகைகளிடம் ஜொள்ளு விட்டு போன் நம்பர் வாங்கி நட்பு ரீதியாக பழகி வருவது இவருக்கு புதிதல்ல. நடிகருக்கும் ஏகப்பட்ட நண்பிகள் உள்ளனர்.
அப்படிப்பட்ட நடிகர் கடந்த சில மாதங்களாகவே ஒரு குறிப்பிட்ட இளம் நடிகை ஒருவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் பப்ளிக்காகவே ஜொள்ளுவிட்டு கிண்டலடிக்கும் செயல் நடந்து வருகிறது.
நம்ம ஊரு நடிகை தான் அவர். டிவியிலிருந்து சினிமா பக்கம் வந்தவர். வந்தவருக்கு வாடி ராசாத்தி என வழி கொடுத்து அணைத்துக் கொண்டது தமிழ் சினிமா. தற்சமயம் இருக்கும் இளம் நடிகர்கள் அனைவருக்கும் ஜோடி இந்த நடிகைதான்.
அப்படி என்ன அந்த நடிகையிடம் இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை. இந்நிலையில் எப்போதுமே ஜாலியான புகைப்படங்களையும் ஏதாவது ஒரு நகைச்சுவை பதிவையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த நடிகை.
அதே நேரத்தில் அந்த நடிகை போடும் ஒவ்வொரு பதிவுக்கும் அந்த நடிகையை பார்த்து ஜொல்லு விடுவது போலவும், அந்த நடிகையை கிண்டல் செய்வது போலவும் தொடர்ந்து ஒரு நடிகர் பதிவிட்டு வருகிறார். இது நட்பு ரீதியாக என்றாலும் அவரது மொக்க காமெடிகள் தாங்க முடியவில்லை என கடுப்பாகிறார் ரசிகர்கள்.