ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

இதுவரை நான்கு பேருடன் காதல் கிசுகிசுவில் இருந்துள்ள ஸ்ருதி ஹாசன்.. நூலைப் போல சேலை!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் ஸ்ருதிஹாசன் இதுவரை தன்னுடைய வாழ்க்கையில் கிட்டத்தட்ட நான்கு பேருடன் காதல் கிசுகிசுக்களில் மாட்டியுள்ளார். அவர்கள் யார் யார் என்பதை பற்றி பார்ப்போம்.

ஸ்ருதிஹாசன்-சித்தார்த்: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வரும் சித்தார்த் மற்றும் ஸ்ருதிகாசன் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும் இருவரும் இணைந்து நீண்ட காலம் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் ஒரு செய்தியுள்ளது.

ஸ்ருதிஹாசன்-தனுஷ்: என்னதான் நல்ல நடிகர் என பெயரெடுத்தாலும் ஏதாவது ஒரு நடிகையை விஷயத்தில் தனுஷ் பெயர் இல்லாமல் இருப்பதில்லை. தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் ரொமான்ஸில் பட்டையை கிளப்பிய திரைப்படம் 3. படத்தில் மட்டுமல்ல நேரிலும் அவர்களது ரொமான்ஸ் எல்லை மீறி சென்றதால் பல பஞ்சாயத்துகள் வைத்து இருவரும் பிரிக்கப் பட்டனர் என்ற ஒரு தகவலும் கோலிவுட் வட்டாரத்தில் உள்ளது.

ஸ்ருதிஹாசன்-மைக்கேல் கார் சேல்: இங்கிலாந்தைச் சேர்ந்த நாடகக் கலைஞரான இவரை ஸ்ருதிகாசன் காதலித்து வந்ததும் இடையில் இருவருக்கும் திருமணம் வரையில் சென்றதும் குறிப்பிடத்தக்கது. இவர் தான் என்னுடைய கணவர் என ஸ்ருதிகாசன் தன்னுடைய தந்தைக்கு அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தான் செல்லும் அனைத்து விழாக்களுக்கும் இவரை உடன் அழைத்துச் சென்றார். அதன்பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

ஸ்ருதிஹாசன்-சாந்தனு ஹசாரிகா: கடைசியாக இந்த ஊரடங்கு சமயத்தில் ஸ்ருதிஹாசன் சாந்தனு என்ற இசைக் கலைஞருடன் ஊர் சுற்றி வருவதாகவும் ஒரே வீட்டில் தங்கி வருவதாகும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.

மேலும் இருவரும் பொது இடங்களில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களும் வெளியாகி இவர்களுக்குள் உள்ள காதலை உறுதிப்படுத்தியது. ஸ்ருதிஹாசனின் தந்தை கமல்ஹாசனும் கல்யாணம் மற்றும் காதல் விஷயத்தில் நிறைய கிசுகிசுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

shruthi-hassan-cinemapettai
shruthi-hassan-cinemapettai
- Advertisement -spot_img

Trending News