ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

4 கதாநாயகிகளுடன் ஜோடி சேரும் கர்ணன் பட வில்லன்.. வேற லெவல் இருக்கும் வெப் சீரிஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நட்டி நடராஜ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் படங்களை இயக்கி வருகின்றனர்.

நடராஜ் நடிப்பில் வெளியான சதுரங்கவேட்டை திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு இவருக்கு ஏகப்பட்ட படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. இதில் ஒரு சில கதாபாத்திரங்களை மட்டுமே நடித்து வருகிறார்.

நடராஜ் நடிகர் தாண்டி கேமரா மேனாக பல படங்களுக்கு பணியாற்றியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் ஒரு பாடலுக்கு பணியாற்றி இருப்பார். அது மட்டுமில்லாமல் மற்ற மொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

நட்ராஜ் வெப் சீரிஸ் தொடரில் நடித்து வருகிறார். இதனை அறிமுக இயக்குனரான ஷாரோன் இயக்குகிறார். மேலும் முனி வேலன் தயாரித்து வருகிறார். மேலும் ஷில்பா மஞ்சுநாத், சாத்வி பாலா, சுப்ரியா மலர் மற்றும் அனனியா மணி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

natraj-shilpa-manjunath-cinemapettai
natraj-shilpa-manjunath-cinemapettai

சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். மேலும் இப்படம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது வெப் சீரிஸ் தற்போது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News