வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

குஷ்புவின் எடை குறைந்த புகைப்படத்தை கேலி செய்த ரசிகர்.. குடுத்தாங்க பாரு செம பதிலடி!

கடந்த சில நாட்களாகவே இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் செய்தி யாரைப்பற்றி என்றால் நம்ம குஷ்பு பற்றி தான். குஷ்புவின் உடல் எடை குறைந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை மிரள வைத்தது.

குண்டாக இருந்த குஷ்பு எப்படி இவ்வளவு ஒல்லியாக மாறினார் என்பதே புரியாத புதிராக உள்ளது என ரசிகர்கள் தொடர்ந்து அவருடைய சமூக வலைதளப் பக்கங்களில் கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

அதேப்போல், அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் குஷ்புவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டது, அதற்கு சுந்தர் சியிடம் கேட்டு சொல்கிறேன் என்று அவர் கூறியதும் இணையத்தில் கலகலப்பை உண்டாக்கியது.

நல்லது ஒன்றிருந்தால் கெட்டது என்ற ஒன்று இருக்குமல்லவா. அந்தவகையில் குஷ்புவின் மெலிந்த புகைப்படத்தை கொண்டாடிய ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்க அதை கேலி கிண்டல் செய்ய ரசிகர்களும் ஒரு பக்கம் இருக்கின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் குஷ்புவின் உடல் எடை குறைந்த புகைப்படத்திற்கு, போட்டோ எடிட்டர் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதை குஷ்புவின் புகைப்படம் நிருபித்து விட்டது என கிண்டலடித்தார்.

இதை கவனித்த குஷ்பு உடனடியாக அவருக்கு தன்னுடைய ஸ்டைலில் ரிப்ளை கொடுத்தார். அதில், முழுக்க முழுக்க எதிர்மறையான எண்ணங்களும், தாழ்வு மனப்பான்மையும் கொண்ட உங்களைப் பார்த்து இரக்கப்படுகிறேன் எனக் கூறியுள்ளார். இதை பார்த்துவிட்டு குஷ்புவின் ரசிகர்கள் குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

kushbu-sundar-reply-to-her-fan-comment
kushbu-sundar-reply-to-her-fan-comment

Trending News