வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025

தலீபான்களால் கிரிக்கெட் வீரரை தூக்கி எறிந்த பிரபல நடிகை.. நின்று போன திருமணம்.!

சினிமா நடிகர்கள் விளையாட்டு வீரர்களை திருமணம் செய்வது, இன்னொரு நாட்டு விளையாட்டு வீரரை திருமணம் செய்வது என்பதெல்லாம் சாதாரணம். அந்தவகையில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பாகிஸ்தான் கிரிக்கெட் வீர சோயப் மாலிக்கை திருமணம் செய்தார்.

சமீபத்தில் கூட தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்தார். இந்நிலையில் இந்திய நடிகை ஒருவர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொள்ளவிருந்த நிலையில், தற்போது திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

மாடலும் இந்தி நடிகையுமான அர்ஷி கான் தமிழில் மல்லி மிஷ்து என்ற படத்தில் நடித்துள்ளார். சில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் சீசன் 11ல் கலந்துகொண்டு பிரபலமான இவர். மீண்டும் பிக்பாஸ் சீசன் 14லும் கலந்து கொண்டார்.

இதுமட்டுமல்லாமல், தொலைக்காட்சி தொடர்கள் சிலவற்றிலும், இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். அர்ஷிகானுக்கும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர்.

விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றி உள்ளதால் திருமணத்தை அர்ஷிகான் ரத்து செய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. தற்போது தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருப்பதால் திருமணத்தை நிறுத்திவிட்டோம்.

arshikofficial
arshikofficial

எனக்கு கணவராக வர இருந்தவரிடம் இனிமேல் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறிவிட்டேன். எனது பெற்றோர் எனக்கு இந்திய மாப்பிள்ளையை பார்ப்பார்கள்’ என்றார்.

Trending News