செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

வெறும் ஒரே மாதத்தில் முடிந்த சிவா படம்.. இது அந்த பழைய பட ரீமேக் தானே!

இப்போதெல்லாம் ஒரு படம் எடுக்க குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் நிலையில் அநியாயத்திற்கு ஒரே மாதத்தில் ஒரு படத்தின் எல்லா வேலையும் முடிந்தது கோலிவுட் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காமெடி கலக்கல் நாயகனாக வலம் வருபவர் சிவா. சென்னை 600028 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது வரை நல்ல என்டர்டைன்மென்ட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக அவரது நடிப்பில் சுமோ என்ற படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆர் கண்ணன் இயக்கத்தில் பழைய சூப்பர் ஹிட் படமான காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கில் நடித்து வந்தார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, கருணாகரன் என பலரும் நடித்துள்ளனர்.

சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். கடந்த மாதம்தான் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படம் வெறும் 35 நாளில் மொத்த வேலைகளையும் முடித்து படத்தை ரிலீசுக்கு ரெடியாக்கி விட்டார்களாம்.

இந்த செய்திதான் இன்றைய கோலிவுட் ஹாட் டாப்பிக். என்னதான் வேகவேகமாக படம் எடுத்தாலும் இவ்வளவு சீக்கிரம் ஒரு படத்தை முடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது. இதேபோல் கடந்த வருடத்தில் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் வெறும் ஒரே மாதத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கும் தயாரிப்புச் செலவு கம்மியாகும். இனி மினிமம் பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் அனைத்துமே ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் நடத்தி முடித்துவிட வேண்டும் என்பதில் கடுமையாக இருக்கப்போகிறார்களாம் படத் தயாரிப்பாளர்கள்.

kaasethaan-kadavuladaa-cinemapettai
kaasethaan-kadavuladaa-cinemapettai

Trending News