சமீபகாலமாக கோலிவுட் வட்டாரங்களில் எந்த நடிகையை கேட்டாலும் குறிப்பிட்ட ஒரு நடிகருடன் நடிக்கவே மாட்டேன் என்று ஒற்றைக்காலில் நின்று அடம்பிடிப்பது ஏன் என்பது குறித்து விசாரிக்கையில்தான் அந்த நடிகர் ராசி இல்லாதவர் என தகவல்கள் கிடைத்துள்ளது.
சொல்லிக்கொள்ளும்படி ஹீரோவாக பெரிய அளவு வெற்றியை கொடுக்காதவர் அந்த நடிகர். ஆனால் காமெடி நடிகராக இருந்தபோது நகைச்சுவை சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கும் அளவுக்கு செம பிஸியாக இருந்தார்.
அதுவும் சின்ன நடிகர், பெரிய நடிகர் என்று பார்க்காமல் யாரை வேண்டுமானாலும் கிண்டல் செய்வதில் வல்லவராக வலம் வந்தார். அப்படிப்பட்டவருக்கு யார் திடீரென ஹீரோ ஆசையை ஏற்படுத்தி விட்டார்கள் என்பதுதான் தெரியவில்லை.
இதுவரை ஏகப்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் ஓரிரண்டு படங்களே வெற்றியைப் பெற்றது. மேலும் இப்போதும் அந்த நடிகருக்கு காமெடி நடிகராக ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. இருந்தாலும் தலை கீழாகத்தான் குதிப்பேன் என தொடர்ந்து ஹீரோவாக நடித்து தோல்விப் படங்களைக் கொடுத்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய படங்களில் முன்னணி நடிகைகளையும் சென்சேஷனல் இளம் நடிகைகளையும் ஜோடியாக வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம் அந்த நடிகர். இதனால் அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்களில் பல நடிகைகளிடம் ஜோடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் யாருக்குமே அந்த நடிகருடன் நடிக்க விருப்பமில்லையாம். காரணம் கேட்டால் அந்த நடிகருடன் ஒரு படத்தில் நடித்தால் அவ்வளவு தான் எங்களுடைய கேரியர் எனவும், அவருடைய படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறுவதில்லை எனவும் காரணம் சொல்கிறார்களாம். இதனால் புதுமுக நடிகைகளுக்கு வலை வீசி வருகிறாராம் அந்த நடிகர்.