சின்னத்திரையில் அனைவரின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவரான ரட்சிதா அவருடைய எக்ஸ்பிரஷன் மூலமாக அனைவரின் மனதையும் கவர்ந்தவர். அவர் விஜய் டிவி பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீசன் 2 வில் நடித்தார்.
தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது சீசனில் செந்திலுடன் நடிக்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக ரட்சிதாவின் கதாபாத்திரம் குறைவான காட்சிகளிலேயே காட்டப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் தொடரை விட்டு வெளியேறி இருப்பதாக சில தகவல்கள் வந்துள்ளன. இதைத்தொடர்ந்து ஒரு ரசிகர் நீங்கள் சீரியலில் இருக்கிறீர்களா இல்லையா என்ற கேள்விக்கு கடுமையாக பதிலளித்துள்ளார்.
சீரியல் இருக்கிறேனா இல்லையா என்று டைரக்டரிடம் அல்லது வசனம் எழுதத் அவர்கிட்ட போய் கேளுங்க என்று காட்டமாக பதில் அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சி சரவணன் மீனாட்சி தொடர் மூலமாகவே மிகவும் பிரபலமானர். ஆனால் அந்த யூனிட்டில் சிலருடன் கருத்துவேறுபாடு உண்டானதால் விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழ் பக்கம் போய்விட்டார்.
இருப்பினும் விஜய் டிவி மறுபடியும் அரிதாகவே அழைத்ததால் அந்த அழைப்பை ஏற்று நாம்இருவர்நமக்குஇருவர் தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டார். தற்போது இந்த தொடரில் தன்னுடைய கதாபாத்திரம் நல்லவளாக காட்டப்பட்ட கதாபாத்திரம் தற்போது கெட்டவளாக மாற்றிக் காட்டுவது போல இருப்பதாக சிலரிடம் வருத்தப்பட்டு கூறியிருக்கிறார்.
மேலும் இதனிடையே ரஞ்சிதாவிற்கு கன்னட பட வாய்ப்பும் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.