புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மணிரத்னத்தை புகழ்ந்து தள்ளிய பிரபலம்.. வேற லெவலில் உருவாகும் பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீப காலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்திருக்கும். மேலும் ரசிகர்கள் பலரும் ஜெயம்ரவியை வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதையே விரும்புகின்றனர்.

ஜெயம் ரவி சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை அதனால் அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் மீது அதிகப்படியாக கவனத்தைச் செலுத்தி வருகிறார். மேலும் இப்படங்களின் வெற்றியை குறித்து இவரது திரைப்படங்களுக்கான வரவேற்பு இருக்கும் என்பது உணர்ந்து தான் தற்போது கதைகளை சரியாக தேர்வு செய்து வருகிறார்.

ஜெயம் ரவி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இப்படத்தில் நடித்த அனுபவத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது சிறப்பான கதாபாத்திரத்தை கொடுத்த மணிரத்தினம் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

ponniyinselvan-cinemapettai
ponniyinselvan-cinemapettai

படப்பிடிப்பு தளத்தில் மணிரத்தினம் நடந்துகொள்ளும் விதமும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் அவர் சொல்லிக் கொடுத்த நடிப்பும் தன்னை வியந்ததாகவும், ஒவ்வொருவரிடமும் பழகிய அன்பு பார்த்து ரசித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பில் இருக்க முடியவில்லை என்று நினைத்து வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்

அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த இருப்பதாகவும் விரைவில் தனது நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்பை பெறும் எனவும் கூறி வருகிறார். மேலும் ஜெயம் ரவி தனது கதாபாத்திரம் ரசிகர்கள் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார். அதனால் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவான படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending News