செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இந்த மாதிரி ரோல் இனிமே வேண்டாம்.. பசுபதிக்கு இப்படி நடிக்க தான் ஆசையாம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீப காலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல படங்களை இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர்.

ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இப்படத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டினர். மேலும் திரை பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு ஆர்யா உட்பட பல நடிகர்களுக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இப்படத்தில் இடம்பெற்ற வேம்புலி, டான்சிங் ரோஸ் மற்றும் ரங்கன் வாத்தியார் போன்ற கதாபாத்திரங்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. அதன் பிறகு ஆர்யா நடிப்பில் உருவாகும் அரண்மனை 3 திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகின.

ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஒரு காட்சியில் ரங்கன் வாத்தியாரை ஆர்யா சைக்கிளில் அழைத்து செல்வார். இந்த காட்சியை வைத்து நெட்டிசன்கள் பலரும் ஆர்யா மற்றும் பசுபதியை கலாய்த்து வந்தனர்.

pasupathi meme
pasupathi meme

ஆனால் ஆர்யா அவரது சமூக வலைதள பக்கத்தில் ட்விட்டரில் பசுபதி புதிதாக வந்ததற்கு வாங்க வாத்தியாரே என பதிவிட்டுள்ளார். ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆனால் சமீபகாலமாக பசுபதி பல இயக்குநர்களிடம் இனிமேல் சைக்கிளில் உள்ள கதாபாத்திரங்கள் தனக்கு கொடுக்க வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இனிமேல் தனக்கு அண்ணாச்சி போன்ற கதாபாத்திரங்கள் கொடுக்கும்படியாகவும் வாத்தியார் போன்ற கதாபாத்திரம் தனக்கு தர வேண்டாம் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர்களிடம் தனது கதாபாத்திரத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாம வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Trending News