செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

மனைவியால் ஏற்பட்ட கடன்.. இராப்பகலாக சம்பாதித்து கடனை அடைக்கும் பிரபல நடிகர்

மனைவியை நம்பி பல கோடி கடனாளியான முன்னணி நடிகர் ஒருவர் தற்போது நிற்கக் கூட நேரமில்லாத அளவுக்கு ராப்பகலாக நடித்து கடனை அடைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர் என பெயர் எடுத்தவர்தான் அந்த இளம் நடிகர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர் ஒருவரின் மகளை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகுதான் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு அடையாளம் கிடைத்தது.

கிடைத்த அடையாளத்தை வேஸ்ட் செய்யாமல் தனக்கு ஏற்ற நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து திறமையான நடிகர் என்பதை நிரூபித்து தற்போது வசூல் நாயகனாகவும் மாறிவிட்டார். மேலும் உலக அளவில் புகழ்பெற்ற தமிழ் நடிகர்களில் இவருக்கு மிகப் பெரிய பங்குண்டு.

போதாக்குறைக்கு தற்போது நிக்க கூட நேரமில்லாத அளவுக்கு பகலில் ஒரு படம், இரவில் ஒரு படம் என வேகவேகமாக நடித்து பணம் சம்பாதித்து வருகிறார். சம்பாதிக்கும் பணத்தை அப்படி என்னதான் செய்கிறார் என்று பார்த்தால் கடனை அடைக்கவே அனைத்தும் சரியாகப் போகிறதாம்.

அந்த நடிகரின் மனைவி ஒரு இயக்குனர் தான். கணவரை வைத்து அவர் எடுத்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதோடு சும்மா இருந்திருக்கலாம். தேவையில்லாமல் அந்த நடிகர் தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்து விட்டோம் என்பதற்காக சுமாரான பல படங்களை தயாரித்து பல கோடி கடனில் சிக்கித் தவித்தார். அதையெல்லாம் மீட்டெடுக்க தான் தன்னுடைய மாமனாரை வைத்து பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்தார்.

ஆனால் அவரது நேரமோ என்னமோ அந்த படமும் தோல்வியைத் தழுவி ஏகப்பட்ட கடனை நடிகர் தலையில் சுமத்தி விட்டதாம். இதன் காரணமாக தற்போது வெளி தயாரிப்புகளில் நடித்து கடனை அடைத்து கொண்டிருக்கிறாராம்.

Trending News