தமிழ் சினிமாவில் அந்த இளம் நடிகை நடிப்பில் ஒரு படம் மட்டுமே வெளி வந்திருந்தாலும் என்னமோ தமிழ் சினிமாவை 10 வருடகாலமாக ஆண்டு வருவதைப்போல ரசிகர்களிடம் அப்படி ஒரு வரவேற்பு இருக்கிறது.
இப்போதைக்கு அம்மணி அக்கட தேசத்தில் செட்டிலாகியுள்ளார். ஆரம்பித்தது ஓருவாக்கம் தற்போது பிரபலமாக இருப்பது இன்னொரு பக்கம் என ஆச்சரியத்தின் மறு உருவமாக வலம் வருகிறார் அந்த இளம் நடிகை.
அதேபோல் நம்ம ஊரு இயக்குனர்களுக்கும் அக்கட தேசத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைத்து வருகிறது. அதை பயன்படுத்தி தற்போது மொழி கடந்து சென்று படங்களை இயக்க அனைத்து முன்னணி இயக்குனர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதை ஆரம்பித்து வைத்ததே பிரம்மாண்ட இயக்குனர் தான். அக்கட தேசத்து வாரிசு நடிகர் ஒருவரை வைத்து மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் படம் இயக்க உள்ளார். அந்த படத்தில் நாயகியாக முதலில் அவரை தான் ஒப்பந்தம் செய்தாராம் அந்த இயக்குனர்.
ஆனால் நடிகைக்கு தற்போது பாலிவுட் வரை புகழ் அதிகரித்துள்ளதால் பெரிய இயக்குனர் என்று கூட பார்க்காமல் இஸ்டத்திற்கு ஆயிரத்தெட்டு கண்டிஷன் போட்டுள்ளார், அதுமட்டுமில்லாமல் அவரது நடவடிக்கைகளும் இயக்குனருக்கு பிடிக்கவில்லையாம்.
இதனால் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் எனக்கு வேண்டாம் எனக்கூறி அந்த நடிகையை படத்திலிருந்து நீக்கி விட்டாராம். அதன்பிறகுதான் வடக்கிலிருந்து வந்த நடிகையை இறங்கியதாக சொல்கிறார்கள். இருந்தாலும் நம்மாளுக்கு கோபம் பொசுக்கு பொசுக்குன்னு வருது!