சினிமா நிறுவனங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பெயரால் மோசடி நடப்பது இப்போது டிரண்டிங்காகவே மாறிவிட்டது. சமீபத்தில் ஆர்யாவை போன்று பேசி ஏமாற்றியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் உண்மை நிலை தெரிய வருவதற்காக ஆர்யாவையும் இரவு நேரத்தில் அழைத்து விசாரனை நடத்தப்பட்டது.
இப்போது நடிகர் சூர்யாவின் 2D பிக்சர்ஸ் சார்பில் பல்வேறு படங்கள் தயாரிக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி ஒரு நபர் இந்த நிறுவனத்திற்காக ஆடிசன் நடத்துவதாக குறிப்பிட்டு சமூக வலைகளில் பரவி வருகிறது.
இதற்காக 2D ன் அபீசியல் டுவிட்டர் அக்கவுண்டில் சூர்யா தகுந்த விளக்கத்தோடு ஒரு பதிவிட்டிருந்தார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது நாங்கள் எந்த படத்தையும் ஆடிசன் வைத்து எடுப்பதில்லை சில படங்கள் எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆடிசன் நடப்பதாகவும் அதற்கு ஒரு பேமண்ட் செய்ய வேண்டும் என்றும் வருகிற தகவல்களை யாரும் நம்பி பணத்தை ஏமார்ந்து விட வேண்டாம் என்றும் கூறியிருந்தார். இதுபோன்ற செய்தி கிடைத்ததும் எங்கள் நிறுவன லோகோவை பயன்படுத்தி ஏமாற்றம் செய்ய முற்படுவதாக புகாரளித்துள்ளோம்.
எனவே யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறியிருந்தார். 2டி நிறுவனத்தின் அடுத்தடுத்த படங்கள் அமேசான் ப்ரைமில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் அதே நிலையில் சூர்யாவும் ஜல்லிக்கட்டு உட்பட அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளார்.