வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

என்னது சூரி ரெட்டை பிறவியா.! ஒரே நேரத்தில், ஒரே வயிற்றில் பிறந்த சூரி தம்பியுடன் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மிகவும் அடிமட்டத்தில் இருந்து தற்போது உயரத்திற்கு வந்திருப்பவர் தான் நடிகர் சூரி. ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து எப்படியாவது சினிமாவில் முன்னேற வேண்டும் என்ற வெறியுடன் தனது திறமையால் இன்று முன்னணி காமெடி நடிகராக உருவாகியுள்ளார்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடி ஒன்றில் சூரி நடித்திருப்பார். அதன் மூலமே இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் அந்த காமெடி காட்சிக்கு பின்னர் ரசிகர்கள் இவரை பரோட்டா சூரி என்று தான் அழைத்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனக்கென தனி இடத்தை பிடித்த சூரி தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அதுவும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகர் சூரிக்கு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் சூரியோ அவரது சகோதரருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் சூரி கூறியுள்ளதாவது, ”ஒரே வயிற்றில் ஒரே நேரத்தில் ரெட்டை பிள்ளையாய் எனக்கு அடுத்து பிறந்தவன் லெட்சுமணன். உழைப்பிலும் திறமையிலும் உயர்ந்தவன்.

என்னைவிட புகழ் பெற்றிருக்க வேண்டியவன். முந்திப் பிறந்ததால்தான் இந்த முன்னேற்றம் என்றால், உனக்குப் பின்னால் பிறந்திருப்பேன் தம்பி. அடுத்த ஜென்மத்தில் நீயே அண்ணனாக பிறக்க வேண்டுகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி” என்று குறிப்பிட்டுள்ளார்.

soori
soori

நடிகர் சூரியும் அவரது தம்பியும் இரட்டை சகோதரர்கள் என்ற தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியமளித்துள்ளது. மேலும் அவர் பகிர்ந்துள்ள அவரது சகோதரரின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Trending News