செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

இயக்குனரை திருமணம் செய்ய மறுக்கும் நடிகை.. 6 வருஷ காதலுக்கு என்னதான் முடிவு?

அளவுக்கதிகமாக காதல் இருந்தாலே ஆபத்துதான். ஒருவிதமான எதிர்பார்ப்புடனேயே வாழ வேண்டியிருக்கும். அப்படித்தான் இயக்குனர் ஒருவர் ஆறு வருஷமாக என்றைக்காவது ஒருநாள் திருமணம் ஆகிவிடாதா? என்ற கனவில் வாழ்ந்து வருகிறார்.

இன்றைய தேதிக்கு டாப் நடிகை அவர்தான். ரம்யா கிருஷ்ணன் போல வயது ஏறஏற இந்த நடிகைக்கு மார்க்கெட்டும் அவரை விட வேகமாக வளர்ந்து வருகிறது. தற்சமயம் ஒரு படத்திற்கு 8 சி வாங்கி வருகிறாராம்.

இப்படி தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருக்கும் அந்த நடிகை இளம் இயக்குனர் ஒருவரை கிட்டத்தட்ட ஆறு வருட காலமாக காதலித்து வருகிறார். சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று சொன்னார்.

ஆனால் கடைசிவரை கல்யாணம் எப்போது என்பதை சொல்லாமல் தவிர்த்து வருகிறார். இதுகுறித்து இயக்குனரும் அடிக்கடி அந்த நடிகையிடம் எப்போது திருமணம் செய்து கொள்ளலாம்? என்று கேட்டால் நடிகையிடம் இருந்து எந்த பதிலுமில்லை.

போகிற போக்கை பார்த்தால் ஹாலிவுட் நடிகைகள் போல திருமணமாகாமலேயே குழந்தை பெற்று வாழ வேண்டிய சூழ்நிலை வந்துவிடுமோ என பயப்படுகிறாராம் அந்த இயக்குனர். சும்மாவே நம்மள விதவிதமாக ஓட்டுவாங்க, இப்படியெல்லாம் நடந்து விட்டால் அவ்வளவுதான் என அச்சத்தில் இருக்கிறாராம் இயக்குனர்.

சமீபத்தில்கூட நிச்சயதார்த்தத்தை நடிகை இப்படி ஓப்பனாக தெரிவித்து விட்டார் என்ற நம்பிக்கையில் திருமணம் எப்போது செய்து கொள்ளலாம் என அந்த நடிகையிடம் கேட்டுள்ளார். கல்யாணமா அப்படி என்றால் என்ன? எனக்கூறி இயக்குனருக்கு ஷாக் கொடுத்துவிட்டாராம் அந்த நடிகை. இப்போதைக்கு நடிகை பணம் தான் முக்கியம் என்பதில் குறியாக இருக்கிறாராம்.

Trending News