வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025

அமிதாப் பச்சனின் செக்யூரிட்டியிடம் இருந்த கோடிக்கணக்கில் பணம்.. விசாரணையில் வெளிவந்த உண்மை

இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். நடிகர் அபிசேக் பச்சனின் தந்தையும் நடிகை ஐஸ்வர்யா ராயின் மாமானாருமாவார்.

இவரை எப்போதும் வெளியில் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வதால் வழக்கம்போல பல்வேறு நடிகர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பாதுகாப்பு எப்போதும் இவருக்கு செயல்பாட்டில் இருக்கும் படி மும்பை போலீசார் வழங்கி இருந்தனர்.

எக்ஸ் க்ரேடு செக்யூரிட்டு அதாவது எப்போதும் இவருடன் இரு காண்ஸ்டபிள்கள் இருப்பர் என்பது போன்ற பாதுகாப்பு வளையத்திற்கு வலம் வருவார் நடிகர் அமிதாப்.

அவருக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் செக்யூரிட்டியாக இருந்து வரும் “ஷிண்டே” என்பரிடம் பல கோடிகள் இருப்பதாகவும் அவர் கோடிகளில் புரல்வதாகவும் கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து அவரை பி.டி ஸ்டேசனுக்கு மாற்றிய மும்பை போலீசார் இத்தகவல் குறித்த விசாரனையில் ஈடுபட்டனர். அதில் கிடைத்த பல்வேறு தகவல்கள் திக்கு முக்காட வைத்துள்ளது ஒரு ஆண்டுக்கு 1.5கோடிகள்வரை அவரது அக்கவுண்டில் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை வைத்து விசாரனை துவங்கிய மும்பை போலீஸ் பல்வேறு விடயங்களை ஷிண்டேவிடமிருந்து பெற்றுள்ளது.

amitabh
amitabh

இது பற்றி ஷிண்டே குறிப்பிடுகையில் இந்த பணம் அமிதாப்பிடமிருந்தோ அல்லது வேறு நடிகர்களிடமிருந்தோ பெறவில்லை என்றும் மேலும் தன் மனைவி ஒரு செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருவதாகவும் அந்த நிறுவனத்தில் பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு தனியார் செக்யூரிட்டி நியமித்துள்ளதாகவும் அதன்மூலமாக வந்த வருமானம் தான் இது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் பணிமாற்றம் குறித்து மும்பை காவல்துறை ஆனையர் கூறுகையில் இது வழக்கமான செயல்பாடு தான் என்றும் 2005 முதல் பணியாற்றி வருவதால் 2020-லேயே சரியாக ஐந்தாண்டுகள் முடிந்ததும் அவர் மாற்றப்பட்டிருக்க வேண்டும் கோவிட் ஊரடங்கு காரணமாக பல்வேறு தாமதங்களுக்கு பிறகு பணிமாற்றம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புகாருக்கும் பணி மாற்றத்திற்கும் சம்பந்தமில்லை என தெளிவுபடுத்தியுள்ளனர்.

Trending News