ஷங்கர் தயாரிப்பில் பரத் நடிப்பில் வெளியான காதல் படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை.
பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் காதல். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காகவே படம் பட்டையை கிளப்பியது. மேலும் ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்த படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாகவே இருந்தது.
நல்ல வசூல் மழை பொழிந்த இந்த படத்திற்கு பிறகு பரத் தமிழ் சினிமாவின் மினிமம் கியாரண்டி நடிகராக மாறினார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
இப்படிப்பட்ட சூப்பர் ஹிட் படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க தவறி விட்டதாக சமீபத்தில் ஒரு செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் தலைசிறந்த நடிகர் இப்படி செய்து விட்டாரே என்ற ஏக்கம் அவரது ரசிகர்களுக்கும் இருக்கிறது.
அவர் வேறு யாரும் இல்லை, நமது தனுஷ் தான். அப்போது தனுஷ் சுள்ளான் படத்தில் மாஸ் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்ததால் இந்த கதை தனது செட் ஆகாது என்று கூறி நிராகரித்து விட்டாராம்.
தனுஷின் சுள்ளான் படமே சுமாரான படமாகத்தான் அவருக்கு அமைந்தது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. தனுஷ் காதல் படத்திற்கு சரியான தேர்வா? என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.