வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

புதிய சாதனை படைத்த மாஸ்டர்.. சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்.!

கடந்த பொங்கல் தினத்தன்று விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. கொரோனா முதல் அலைக்குப்பின் திரையரங்கில் வெளியான முதல்படம் இது. மாஸ்டர் படத்தைப் பார்க்க திரையரங்குகளுக்கு மக்கள் வருவார்களா, மாட்டார்களா என்ற சந்தேகத்தில் ஒருவழியாக படம் வெளியானது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரும் வசூலை வாரி குவித்து விஜய் ஒரு பெரிய ஸ்டார் என்பதை இந்திய சினிமாவுக்கே நிரூபித்தது. அந்த படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தை விட வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது தான் ஆச்சரியமே.

இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் என பெரிய நடிகர் பட்டாளமே இடம்பெற்றிருந்தது. இப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி வேற லெவலுக்கு சென்றுவிட்டார். தற்போது அவர் கிட்டத்தட்ட 26 படங்களுக்கு பல கோடிகளில் அட்வான்ஸ் வாங்கி குவித்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களுமே அதிரி புதிரி ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடல் இந்தியா முழுவதுமே செம ஹிட். தற்போது இந்தப் பாடல் யூடியூபில் 25கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இப்பாடலை 26 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இப்படத்தையடுத்ததாக விஜய் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

master
master

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் செப்டம்பர் முதல் வாரத்தில் நான்காவது கட்ட படப்பிடிப்புகள் மீண்டும் சென்னையிலேயே தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News