வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

6 மணி நேரத்தில் 25 லட்ச ரூபாய் தட்டி தூக்கிய புகழ்.. கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிகிட்டு கொடுக்கும்.!

நீண்ட காலமாகவே விஜய் டிவிக்கும் சினிமாத்துறைக்கும் அதிக நெருக்கம் உண்டு. விஜய்டிவின் ரியாலிட்டி ஷோக்கள் முதல் சீரியல்கள் வரை புகழ் பெற்றவர்கள் அனைவருக்கும் நிச்சயம் சில வாய்ப்புகளை தரும் பெரிய திரை.

சந்தானம் சிவகார்த்திகேயன் யோகி பாபு என சினிமாவின் பல்வேறு அங்கங்கள் இந்த விஜய் டிவியில் புகழ் பெற்றவர்களே.

இப்படியாக  புகழ் பெற்று வந்த விஜய்டிவி இப்போது ஒரு புகழையே பெரியதிரைக்கு ஏற்றுமதி செய்து விட்டது கலக்கப்போவது யாரு குக் வித் கோமாளி போன்றவற்றால் பிரபலமான புகழ் தான் அவர். குக் வித் கோமாளியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதியுடன் ஒரு படம் அருண் விஜயுடன் ஒரு படம் சபாபதி என்கற தலைப்பில் ஒரு படம் என படுபிசியாக உள்ளார் புகழ்.

pugazh-cinemapettai
pugazh-cinemapettai

சமீபத்தில் அமேசான் ப்ரைம் நடத்திய ஒரு போட்டியில் விஜே விக்னேஷ் காந்த் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஆர்த்தி, பிரேம்ஜி, அபிசேக் குமார், சதீஷ், மாயா, புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கடைசிவரை நகைச்சுவை செய்பவர்கள் சிரிக்கக்கூடாது இப்போட்டியில் கடைசிவரை சிரிப்பை அடக்கி போராடி வென்றார் விஜய் டிவியின் புகழ்.

- Advertisement -

Trending News